தனது வரம்பென ஏதாவது ஒன்று சொல்லப்படும் போது அதை முதலில் மீறி தன் சுதந்திரத்தை நிலைநாட்டிக்கொள்வது இலக்கியத்திற்கு மட்டுமே உரிய ஒன்று. இந்த சுதந்திரத்தை தொடர்ந்து பிரகடனப்படுத்திக் கொள்வதில் மற்ற வடிவங்களை விட கவிதை முதன்மை வகிக்கிறது. அதற்கேற்றாற் போல் தமிழில் கவிதை இயற்றும் படைப்பாளர்களின் வீரியம் சமகால பிறமொழி இலக்கியங்களுக்கு சளைத்தது அல்ல என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். யாரென்று தெரியாத ஒருவரிடமிருந்து கவிதை அதன் முகத்தை புதுப்பித்துக்கொள்ளும். இலக்கியத்தின் அயராத எதிர்ப்புகுணம் வெளிச்சத்திற்கு அப்பால் இயங்கக்கூடிய […]