கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
மரக்கறி - சாதாரணத்தை அசாதாரணமாக்கும் கருப்பு அற்புதம்
ஷாராஜ்

மரக்கறி – கொரிய நாவலாசிரியை ஹான் காங்கின் நாவல். 2016-ல் சர்வதேச மேன்புக்கர் விருது பெற்றது. ஆங்கில மொழிபெயர்ப்பு: டெபோரா ஸ்மித். தமிழில்: சமயவேல். வெளியீடு: தமிழ்வெளி. பக்கங்கள்: 224. விலை: ரூ.220. தமிழில் வெளியான முதல் கொரிய நாவல் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். கொரிய இலக்கியம் அவ்வளவு பிரபலமானதல்ல. ஆனால், மில்லேனியம் வாக்கிலிருந்து கொரியக் கலைத் திரைப்படங்கள் உலக அளவிலும், தமிழக கலைத் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம். நமது இலக்கியவாதிகளில் பலரும் கொரிய […]

மேலும் படி
பிரதாப ருத்ரன் கவிதைகள் – ஒரு பார்வை :
ஜீவன் பென்னி

                                                                                        1. மழை மியூசியம் (2014) – புது எழுத்து, 2. கடலாடும் கல் ஓவியம் (2017) – மையம் வெளியீடு , 3. பியானோ திசை பறவை (2020) – சொற்கள் வெளியீடு. தன் நிலத்தில் படர்ந்திருக்கும் உயிரினங்களின் மொழியை எழுதுதல் அல்லது அதன் பேரன்பைக் கட்டியிழுத்துக் கொண்டு பயணித்தல் : ‘அனுபவத்தை வடிவமைக்கும் போது கவிதை ஒரு முழு முற்றானதும் இதுவரை சாத்தியத்திற்கே வந்திராததுமான முழுமையின் ஒரு சிறிய பங்கைப் பிரதிநிதித்துவம் செய்கிறது’ - […]

மேலும் படி
வலியையும், வாழ்வியலையும் பற்றிப் பேசுகின்ற சொல்லில் உறைந்து போதல்
நஸார் இஜாஸ்

இருத்தலுக்கான அழைப்பு, அவாவுறும் நிலம் ஆகிய இரு கவிதைத் தொகுதிகளின் பின்னர் கவிஞர் முல்லை முஸ்ரிபாவின் மூன்றாவது தொகுதியே 'சொல்லில் உறைந்து போதல்' கவிதைத் தொகுதியாகும். வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வில் அரங்கேறிச் சென்ற நாளாந்த செயற்பாடுகளில் பிரித்தறியப்பட்ட துயரங்களை அப்பட்டமாக எழுத்துக்களில் கொண்டு வந்ததன் ஒட்டு மொத்த சேர்க்கையாகவே 'சொல்லில் உறைந்து போதல்' கவிதைத் தொகுதி எமது கண் முன்னே விரிந்து நிற்கின்றது.  சொந்த தேசத்தை விட்டு வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்டு, தான் பிறந்து வளர்ந்த, தனது […]

மேலும் படி
கலாச்சார காலனிய மையம் அறுக்கும் சிவகாமியின் புதினங்கள்
ஜோ.செ. கார்த்திகேயன்

பார்ப்பன இலக்கியம், பார்ப்பனரல்லாத இடைச் சாதி இலக்கியம், ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்ற சாதிய அடுக்குகளில் வகைப்படுத்தி வாசிக்கப்படுகிறது இலக்கியம். இவற்றில் ஒடுக்கப்பட்டோர் இலக்கியங்களாக அடையாளங் காணப்படுபவை, ஆரியக் கலாச்சாரக் காலனியாதிக்க வடிவங்களாக அறியப்படும் சாதிய அடுக்கதிகாரங்களையும் மத நிறுவனத்தின் பெயரில் நிகழ்த்தப்படும் தீண்டாமை சார்ந்த புனைந்துரை அதிகாரங்களையும் அவை ஐரோப்பியப் புவியியல் காலனியாதிக்க வடிவங்களோடு கை கோர்த்து விளிம்புநிலை மக்களின் மனங்களை மேலாண்மை செய்கிற கருத்தியல் ஆதிக்க அதிகாரங்களையும் சுதேசிய அரசு இயந்திரத்தின் பார்ப்பனவயப்பட்ட மனு தர்ம […]

மேலும் படி
நூல் விமர்சனம்: அனோஜன் பாலகிருஷ்ணனின் சிறுகதைகளில் ஆண்களும் எதிர்ப்பாலியல் ஒழுங்கமைப்பும்
ஹரி இராசலெட்சுமி

முகிழ்த்தெழுந்த கலவியின்பங்களிலும் என் தன்னிலை ஆச்சரியப்படுத்தியது (பக்51) ...என்னை நானே வெறுக்க எத்தனித்து என் போலித்தனத்தைக் கண்டு சோர்வடைந்தேன். (பக்.54; சதைகள், 2016) அனோஜன் பாலகிருஷ்ணன் வெகுவாகவே கவனம் பெற்ற இளம் எழுத்தாளர். தரமானவை என்று கருதப்படும் எல்லா இலக்கிய இதழ்களும் - இலங்கை, தமிழ்நாடு, புலம்பெயர் தேசங்கள் வேறுபாடின்றி - அனோஜனின் சிறுகதைகளைப் போட்டிப் போட்டுக்கொண்டு பிரசுரிக்கின்றன. சமூகவலைத்தளங்களில் அவருக்கென்றே ரசிகர்கள் உருவாகி வருவதையும் காணமுடிகிறது. இதற்கான காரணங்கள் நிச்சயமாக உண்டு. இலகுவான, வீண் சிக்குப்பாடுகள் […]

மேலும் படி
திரைமேதை அலெயாந்த்ரோ ஹோடோரோவ்ஸ்கியுடனான உரையாடல்
இலன் ஸ்டாவன்ஸ்
மொழியாக்கம்: வளவன் தங்கவேல்

இலன் ஸ்டாவன்ஸ்: என் பெயர் இலன் ஸ்டாவன்ஸ்,ரெஸ்ட்லெஸ் புக்ஸின் பதிப்பாளர். ‘பறவை மிகச்சிறப்பாய் பாடுமிடத்தில்’ புத்தகம் இப்போது இங்கு என்னிடம் உள்ளது எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை நான் சொல்லியாகவேண்டும். கூடவே, பல வருடங்களுக்கு முன்பு மெக்ஸிகோவில் உங்களுடன் நாடகம் நிகழ்த்திய ஆப்ரகாம் ஸ்டாவன்ஸ் அவர்களின் மகனுமாவேன். தங்களது அரங்காற்றுகையான ‘நாம் அனைவரும் ஆடும் ஆட்டம்’ கண்டிருக்கிறேன். என் குடும்பத்தில் இன்னுமொரு தலைமுறை உங்களுடன் இணைந்து செயல்பட வாய்த்திருப்பது உள்ளபடியே எனக்கு மகிழ்வான ஒன்று. அலெயாந்த்ரோ ஹோடோரோவ்ஸ்கி: இன்னும் […]

மேலும் படி
ஐந்தவித்தான் நாவல் குறித்து…
வே. மு. பொதியவெற்பன்

4. ஆங்கிலேயப் பின்நவீனத்துவ அல்மார்க்ஸிய விமர்சகராக டேவிட்லாட்ஜை இனம்காணும் நோயல் Modes of Modern Writing (1977) நூலில் அவர் வகுத்தளித்த ஆறு நவீனத்துவ உத்திகளைப் பற்றி குறிப்பிடுகின்றார். “ஆங்கிலேய, அமெரிக்க ஐரோப்பிய பின்நவீனத்துவப் புதினங்களின் ஆறு பொதுமைக் கூறுகளாக Contradiction, Permutation, Discontinuity, Randomness, Excess, Shortcircuit எனப்படும் முறையே முரண்ஆக்கம், விகாரசேகர வாய்ப்பாட்டாக்கம், தொடர்பின்மை, தீவிர ஒழுங்குமுறையின்மை, மிகை மின்சுற்றுமறிப்பு ஆகியவற்றை உள்ளடக்கும் வடிவ இயல் சடாங்க வருணனைச் சட்டகம் வகுத்தார்” - நோயல் […]

மேலும் படி
ஆன்மீகத்திற்கும் கலைக்கும் இடையே இயங்கும் மீமெய்மைகளின் பிரதி (தேவேந்திரபூபதியின் வாரணாசி கவிதைத் தொகுப்பை முன்வைத்து...)
யவனிகா ஸ்ரீராம்

எந்தவொரு தேசத்தின் கவிதைகளையும் அது எந்த மொழியில் இருப்பினும் இரண்டுவிதமாகப் பார்க்கலாம். ஒன்று, காலகாலமான மனிதனின் வரலாற்றுத் தடங்கள் மிகுந்தவை. இன்னொன்று, அருகிவிட்ட விலங்குகளின் தடங்களைத் தேடி அவற்றை எண்ணிக்கையிடுவது. முதல்வகைக் கவிதைகளுக்கு எப்போதும் ஆவணங்கள் உண்டு.அவை பெரும்பாலும் வரலாற்றை, பண்பாட்டை, கலாச்சாரத்தை நம்பியிருப்பவை. மனித உயிர்  உணர்ச்சிகளை அல்லது மனிதனாக இருப்பது குறித்து பிரலாபித்துக்கொள்பவை. அவை இடம், காலம் போன்றவற்றில் தன் புழங்கும் மொழியை அற்புதமாக்குபவை. மிகையுணர்ச்சிக்கும் தனது மனிதப்பார்வைகளுக்கு இடையே சாராம்சத்தை நிலைநிறுத்த முயல்பவை. […]

மேலும் படி
மனிதம் நிரம்பிய கதைகள் – ‘உவர்’ தொகுப்புக் குறித்து
ஞா.தியாகராஜன்

மணல் வீடு சிற்றிதழில் சிவசித்துவின் ‘உறைதல்’ கதை முதலில் பிரசுரமானது. சிறுகதைக்கான சமகால வரையறைகள் எதையும் தன்மீது சுமத்திக்கொள்ளாமல் இயல்பாக எழுதப்பட்ட ‘உறைதல்’ முதல் கதை என்பது போன்ற எந்தச் சாயலுமின்றித் தரமானதாகவே எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து மணல்வீட்டில் அடுத்தடுத்து சில கதைகள் வெளியானது. ஒன்பது கதைகளுடன் தற்போது அவை தொகுப்பாக வெளியாகியிருக்கிறது. தற்காலச் சிறுகதைகளில் பாய்ச்சல் நிகழ்த்துவதாக அறுதியிடப்படும் எவரிடமிருந்தும் சித்துவின் சிறுகதைகள் வேறுபட்டவை. உண்மையில் படைப்பு குறித்த கருத்துரைகளைத் தன்மீது சுமத்திக்கொள்ளாதிருப்பதே அவற்றின் படைப்பூக்கத்தைத் தக்க […]

மேலும் படி
முறையிட ஒரு கடவுள்-சர்வோத்தமன் சடகோபன் கதைகளை முன்வைத்து
ஞா.தியாகராஜன்

எந்த அறிவுத்துறையிலும் பயன்படுத்துவதற்குரிய ‘தொண்ணூறுகளுக்குப் பிறகான’ என்னும் வரையறையை சர்வோத்தமனின் ‘முறையிட ஒரு கடவுள்’ சிறுகதை தொகுப்பிற்கு பயன்படுத்தலாம். சடகோபனின் பாத்திரங்கள் கோட்பாடுகளால், தத்துவங்களால், கருத்தியல்களால் உளச்சிக்கல்களுக்கு ஆளாகுபவர்கள். இந்தச் சந்தை மயமாக்கப்பட்ட உலகத்தில் தனது அடையாளத்தை எதன் மூலமாவது நிறுவிக்கொள்ள முயன்றுகொண்டிருப்பவர்கள். அது முடியாமல் அலைக்கழிபவர்கள். ஒரு வகையில் இவற்றின் படைப்பாக்கம் சுயத்திலிருந்து புனைவுக்கு நகர்கிறது. இதில் எங்கேயாவது படைப்பாளரை வாசகன் கண்டுகொள்ளக் கூடிய வாய்ப்பிருக்கிறது. சிற்றிதழ் மரபின் தற்போதைய தீவிர இலக்கியம் என்னும் வரையறைக்கு […]

மேலும் படி
மேல் செல்