கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
எரிந்தும் நூராத் தணல் - தில்லையின் தீரா 'விடாய்'
பொதிய வெற்பன்

(நூரா = அவியா, விடாய்= தணியாத் தாகம். எரிந்தும் நூராத் தணல் = நீறு பூத்த நெருப்பு) தில்லையை நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் குட்டிரேவதியே. தொகுப்பேதும் வாரா நிலையில் தில்லையின் உதிரிக்கவிதைச் சேகரத்திலிருந்து அறிமுகத்தை 'ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகளி'ல் முன்வைத்தார் குட்டிரேவதி. இத்தொடர்பில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இத்தலைப்பை மாற்றித்தருமாறு 'வம்சிபுக்ஸ்' கேட்ட போது மாற்றிட மறுதலித்தே அந்நூல் 'நாதன் பதிப்பக' வெளியீடாக வெளிவர நேர்ந்தது. 'லிங்கமையச் சொல்லாடல்' என்பது பின்னைநவீனத்துவ முறையில் ஆணாதிக்கத்தைச் […]

மேலும் படி
முடிவிலியின் ஆதார சுருதியை மீட்டும் மீனும் பண்பாடும்
ஆகாசமுத்து

“இசையில் ஒரே ஒரு ஆதார ஸ்ருதிதான் இருக்கிறது. அதுதான் முழுமையானது” என்றார் கர்தர் ஹோம். “ அந்த ஆதார ஸ்ருதியைக் கேட்டுவிட்டவர் எவரும் வேறு எதையும் கேட்கத் தேவையில்லை. என்னுடைய பாட்டெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் நான் சொல்லும் ஒரு விஷயத்தை நீ எப்பொழுதுமே ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த உலகம் உனக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்ட பிறகு, புகழின் ஈவு இரக்கமற்ற நுகத்தடி உன் தோளில் ஏற்றப்பட்டு, மிகக் கொடிய குற்றவாளியின் மீது பதியப்படுவது போல் […]

மேலும் படி
மிளகு
வசுமித்ர

தானொரு காலத்தில்குரங்காய் இருந்ததைவெறுக்கவும் மறக்கவும்தான்மரங்களை வெட்டுகிறோமோகாடுகளை அழிக்கிறோமோ மிருகக்காட்சி சாலையில்குரங்குகளைக் கண்டதும்இளித்தும்பழித்தும்குச்சியாலும் கற்களாலும்எரிகிறோமோ காடேநீஎங்கிருக்கிறாய்குரங்கின் கருவறைக்குள்ளா? ‘மலை என்பது நீளமான மரம்’ எனத் தொடங்கி இடையில் ‘புறக்கணிப்பின் புற்றில் வாழ்கிறேன்’ எனச் சொல்லி ‘நானொரு வெட்டப்பட்ட மரம்’ என்றவாறு தன் கவிதைளை (வடிவரீதியில்) முடித்திருக்கிறார் சந்திரா தங்கராஜ். ‘மலை என்பது நீளமான மரம்’ என்று சொல்லும்போதே அது பூர்ஷுவா வர்க்கப் பார்வை என்பது விளங்குகிறது. கவிதைகளில் புள்ளினங்கள் விலங்கினங்களோடு ஏகப்பட்ட இயற்கை உயிரினங்கள் காணக் கிடைக்கின்றன. சமீபமாக […]

மேலும் படி
வாழ்வின் நவீன வெளிகளில் ஒரு அந்தப்புரப் பறவை
றியாஸ் குரானா

கதையையே கவிதையாகச் சொன்ன காவிய மரபின் தொடர்ச்சியிலிருந்து, கவிதையைக் கதையாகச் சொல்லும் எடுத்துரைப்பு முறைமைகளின் புதிய திசைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இது கவிதையின் மாறக்கூடிய பகுதிகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களில் ஒன்று. இது பின்நவீனத்துவக் கவிதைகளின் நிலை. இப்படி எத்தனையோ மாற்றங்களைக் கவிதையில் ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடிகளுக்குள் நின்றுதான் கவிதையை இன்று அணுக வேண்டியிருக்கிறது. ஆனால், அலறியின் கவிதைகள் நவினத்துவப் பண்புகளையே அதிகம் கொண்டிருப்பதால், இத்தனை நெருக்கடிகளையும் ஒரு புறத்தில் வைத்துவிட்டு, என்ன சொல்கிறது? என்ன செய்ய முற்படுகிறது? அதன்வழியாகத் தன்னை […]

மேலும் படி
யாத் வஷேம்: ஹிட்லர்களுக்கு வதையும் இல்லை; மரணமும் இல்லை!
ஷாராஜ்

யாத் வஷேம் (நினைவுத் தலம் - ஹீப்ரு), கன்னட நாவலாசிரியை நேமிசந்த்ராவின், சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். புனைகதை என்று அட்டைக் குறிப்பில் இடம்பெற்றிருந்தாலும், இது ஆவணப் புனைவு வகைதான். சிறுமியாக இருந்தபோது ஹிட்லரின் யூத இன அழித்தொழிப்பிலிருந்து தப்பி, தந்தையுடன் இந்தியாவில் அடைக்கலமாகி, இந்துவை மணந்து இந்துவாக வாழும் ஒரு பெண், தன் முதுமைக் காலத்தில், நாஜிகளிடம் சிக்கியிருந்த தாய் மற்றும் சகோதர - சகோதரிகளைக் குறித்த விபரம் அறிய தாய்நாடு சென்று வருவதினூடே, […]

மேலும் படி
அஜ்னபி நாவல் குறித்து எனது பார்வை
களந்தை அப்துல் ரஹ்மான்

அரபு நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பும் ஒருவர் கொண்டு வரும், பெரிய பெரிய அட்டைப் பெட்டிகளில் இருந்து எடுத்துத் தரப்படும் ஃபெர்பியூம், வாட்ச், எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் சுண்டு விரல் சைசில் தரப்படும் கோடரி தைலங்கள் வரை அனைத்திலும், வெளிக்காட்டிக் கொள்ள முடியாத அல்லது வெளியே காட்டத் தெரியாத அன்பும் உறவும் நட்பும் நிறைந்திருக்கிறது. சிலருக்கென்றே பிரேத்யேகமாகப் பொருட்கள் கொண்டுவரப்படுகிறது என்றால், அவரைப் பற்றிய நினைவுகளும் தேடல்களும், அரபு நாட்டு வாழ்வில் அதிகம் இருந்திருக்கும் என்பதற்கான […]

மேலும் படி
நான் எழுதாத முன்னுரையும் போர்ஹெஸின் கவிதைகளும் (பகுதி III)
எம்.டி.முத்துக்குமாரசாமி

முகவிலாசமும் முகத்துலக்கமும் மௌனி போர்ஹெஸை வாசித்திருக்கிறார் என்பதைப் படித்ததால் ஏற்பட்டது என்று பகுதி2 இல் எழுதியதைத் தொடர்ந்து ஏதேதோ யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தன. மௌனிக்கும் போர்ஹெஸுக்கும் உள்ள பல ஒற்றுமைகளைப் பற்றி யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தேடிப் பார்த்ததில் எதுவும் கிடைக்கவில்லை. தன் அடையாளம்,  பிறன்மை (other) என்பதன் விளையாட்டினைத் தன் கலையின் மையமான சரடாக மௌனியிடமும் போர்ஹெஸிடமும் காணலாம். தன் அடையாளம் , பிறன்மை என்பவற்றை எதிரிடையாகக் காண்பதன் அபத்தம் கூட இந்த விளையாட்டின் கிரியைகளில் ஒன்று; […]

மேலும் படி
நான் எழுதாத முன்னுரையும் போர்ஹெசின் கவிதைகளும் (பகுதி II)
எம்.டி.முத்துக்குமாரசாமி

ஹா! நாட்கள்தான் எப்படி ஓடுகின்றன! கரையும் காலத்தைப் பற்றி பிரக்ஞை ஏதுமின்றி இரண்டாம் பகுதியினை எழுதவேண்டுமே என்ற ஓர்மையில்லாமல், வேற்றுக்கிரகவாசி இவ்வுலக நாட்காட்டியை அலட்சியம் செய்வது போல விச்ராந்தியாய் இருந்துவிட்டேன். சிறு மழைத் தூறல்களுடன் கூடிய மாலை வேளைகள் நாகர்கோவிலுக்கான ஏக்கத்தை அதிகப்படுத்தியபடியே இருந்தன. மழைக்காலம் என்றில்லாமல் எப்பொழுதுமே அப்பா நாகர்கோவிலில் இருப்பதான பாவனையிலேயே சென்னையிலும் வாழ்ந்தார். வயதாக வயதாக அப்பாவின் பாவனைகள் என்னையும் பீடிக்கின்றன போலும். சீக்கிரத்திலேயே நானும் ப்ரௌனிங் ரசிகனாகிவிடுவேனோ?  அரசு வேலையிலிருந்து ஓய்வு […]

மேலும் படி
நான் எழுதாத முன்னுரையும் போர்ஹெசின் கவிதைகளும் (பகுதி I)
எம்.டி.முத்துக்குமாரசாமி

என்னுடைய “நீர் அளைதல்” கவிதைத் தொகுதி நற்றிணைப் பதிப்பக வெளியீடாக அச்சில் வெளிவரவிருக்கிறது. அத்தொகுதிக்கு ஒரு முன்னுரையை எழுதுமாறு நற்றிணைப் பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் யுகன் கேட்டிருந்தார். நான் பல நாட்கள் நன்றாகத் தூக்கம் போட்டேன், என் மகன்களைக் கொஞ்சி விளையாடினேன், கோடையின் வெக்கை தணிய பூமி குளிர பெய்த முதல் மழையில் விட்டேத்தியாக நனைந்தேன், இஷ்டம் போல் செவ்வாழையும் நேந்திரனும் சாப்பிட்டேன் ஆனாலும் ஒரு வரி கூட முன்னுரைக்காக என் மனதில் உதயமாகவில்லை. மெல்லிய, சிறிய முதல் […]

மேலும் படி
நேற்றின் ஜன்னலுக்குப் பார்வையைத் திருப்புதல் – பா.ராஜாவின் கவிதைத் தொகுப்பு
ஜீவன் பென்னி

அன்றாடங்களின் எல்லையற்ற வெளி : கவிதைகளின் சொல்லாடல்கள் ஒரு உலகினை உங்களுக்கு மிக நெருக்கமானதாக உணர்ந்து கொள்ள வைக்கின்றன மேலும் மனதின் எல்லையற்ற தூரத்தின் நினைவுகளை ஒரு கவிதையில் தான் மிக நேரடியாகத் துவங்கிக்கொள்ளவும் அனுபவிக்கவும் முடிகிறது. நிகழ்வுகளின் சங்கதிகளையும் அதன் அனுபவப்பரப்பின் நுட்பமான புள்ளிகளையும் செயல்களின் தளத்திலிருந்து மெய்மையின் அடர்த்தியான தீவிரத்தன்மைக்கு அருகாமையில் கொண்டு வந்திடும் புத்துணர்ச்சிகளையே ஒவ்வொரு நல்ல கவிதையும் செய்கின்றன. அறிவின் சூத்திரங்களைப் பின்தொடர்ந்திடும் லாவகமான தன்மையிலிருந்து விலகி வாழ்நிலைகளின் படிமங்களிலிருக்கும் மனவெழுச்சிகளின் […]

மேலும் படி
மேல் செல்