கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை அது எளிய விஷயங்களை நேசிக்கிறது. சற்றே தயக்கத்துடன் உங்கள் தோட்டத்தில் முளைத்திருக்கும் நீங்கள் விதைத்திராத புதிய தாவரம்; சுவர் மீது கால் வைத்து நீங்கள் பந்து விளையாடுவதையே தலைசாய்த்துப் பார்க்கும் பக்கத்து வீட்டு நாய்; ரயிலில் மடியில் உறங்கும் சிறுமியைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே மறு கையில் புத்தகம் படிக்கும் அன்னை; பிளாட்பாரத்தில் வடை விற்பவன் பின்னால் நடந்து போகும் காகம்; கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை. ஏற்கெனவே நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய அற்புதத்தைக் […]