கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
நா.வே.அருள் படைப்புகளும் பார்வைகளும்
ஜமாலன்

தோழர் கவிஞர் நா.வே. அருள் அவர்களின் கவிதைகள் எனக்கு முதன்முதலாகப் பரிச்சயமானது சுமார் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான்.  அவரது பச்சை ரத்தம் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச அழைத்திருந்தார்.  அது புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற ஒரு பெரிய விழா.  அந்நூல் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.  பொதுவாக, கவிதை தமிழ் சமூகத்தின் ஒரு இலக்கிய உணர்வு மட்டுமல்ல உணவும் போன்றது.  தமிழவனின் “சரித்திரத்தில் படிந்துள்ள நிழல்கள்” என்ற […]

மேலும் படி
அம்பரம் - தகர்ந்த பிம்பங்கள்.
பிரேம்

நாம் நம் சிறுவயதில் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள் உடைந்து போகும் கணங்கள், பல நேரம் வலிமிகுந்ததாக இருக்கும். அப்படி உடையும் போது, உண்மைக்கும் நம் மனதிலிருந்த பிம்பத்துக்கும் இருக்கும் வேறுபாடு, பிரமிக்க வைக்கும்... இவ்வளவு காலம் இத்தனை பெரிய வேறுபாட்டை எப்படி கவனத்தில் கொள்ளாமல் இருந்தோம் என்று வியப்பாகவும் வலியோடும் பிறகு எண்ணிப்பார்த்துக் கொள்வோம். தீவிர திராவிட உணர்வோடு இருந்த என் தாய்வழி தாத்தா எனக்கு பெரியாரையும் அண்ணாவையும் அடையாளம் காண்பித்தார். மாறாக என் தந்தை  வழியில், […]

மேலும் படி
மழை வெளி காற்றுக்கும் தன்னைப் பதப்படுத்துதல்
யவனிகா ஸ்ரீ ராம்

ஒரு மொழியில் கவிதைகள் கருக்கொள்ளும்  காலம் இடம் போன்றவை பொருள் வயமான இவ்வுலகின் காலா தீத அவதானங்களாக இருப்பதன்றி சில வேளைகளில் தன்னில் பிறரையும் பிறரை தன்னிலும் உணரும்  உறவாகவும் அதே நேரம் தன்னுணர்ச்சிகளின் திளைப்பாகவும் விருப்ப வேட்கையாகவும் சுருங்கச் சொன்னால்  ஒருவகையில்  தன் வலியின்  மகிழ்வின் மீதுணர்ந்த சுதந்திரத்தின் எல்லைகளை அழகியலாக  வரைவதுடன் தான் அல்லாத மற்றமைக்குத் தோதாக காட்சிப்படுத்தும் கலையாகவும்  போக அதைப் பொதுவெளிக்கு இப்படியாகக் கையளித்தும் விடுகின்றன.  அதனளவில் அதற்குள் உண்டாகும் பிம்பங்களும் […]

மேலும் படி
பிரஞ்ஞை பூர்வ கலைகளின் மதிப்பு நீக்கம் – செல்வசங்கரன் கவிதைகள் குறித்து...
ஞா.தியாகராஜன்

செல்வ சங்கரனின் ஆறாவது தொகுப்பான ‘மத்தியான நதி’ சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘பறவை பார்த்தல்’ தொகுப்பிலிருந்து அவருடைய கவிதைகளுடனான எனது பரிச்சயம் தொடங்குகிறது. கவிதையெழுத முனைபவர்களின் ஆரம்பகாலப் பிரயாசைகள் எத்தனங்கள் ஆகியவற்றை இத்தொகுப்பில் காணலாமென்றாலும் இரண்டாவது தொகுப்பான ‘கனிவின் சைஸ்’லிருந்து கவிதையின் நெடிய போக்கில் தன் இடத்தை உறுதிப்படுத்த விரும்பும் அவருடைய முயற்சிகள் தொடங்கியதெனலாம். சொற்களின் குறைவான பயன்பாடும் அதன்மூலமான எல்லையற்ற அர்த்தவிரிவும்தான் கவிதையின் பொது அடையாளமாகக் கூறப்படும் சூழலில் அதற்கு நேரெதிரான வகைமாதிரியாகச் செல்வசங்கரன் தனது கவிதைகளை […]

மேலும் படி
நான்தான் ஔரங்கஸேப்
ரமேஷ் கல்யாண்

காத்திப்  என்றழைக்கப்படும்  எழுத்தாளன், ஒரு அகோரியின் உடலில் பாபரின்  ஆவி வந்து புகுந்திருக்கும்போது,  அதனுடன் உரையாடலாம் என்று திட்டமிட்டிருக்கையில், ஔரங்கஸேப் ஆவி வந்து பேசுகிறது எனும் கற்பனையும் எதிர்பாராமையும், கிண்டலுடன் வரலாறு பார்க்கப்படுவதும்,  ஒரு பின் நவீனத்துவ நாவலுக்கு படிப்பவரை தயாராக்கிவிடுகிறது. ஔரங்கஸேப், உரையாடும் காத்திப், நாவல் எழுதும் சாரு என்று மூன்று வாசகப் பிரதேசங்கள் நாவலில் உள்ளன. முகலாய மன்னன், சமகால விஷயங்கள் கிண்டல் தொனிக்கும் இடங்கள், போன்றவை முன்கதைத் துவக்கத்தில் ‘சோ’ வின் ஒரு […]

மேலும் படி
கவிஞர் வெய்யிலின் "அக்காவின் எலும்புகள்"
- ஓயவே ஓயாத தொனிகளின் உற்பத்திக் களம்-  
க.பஞ்சாங்கம்

                                                        வெய்யில், '"அக்காளின் எலும்புகள்", (2018),, கொம்பு பதிப்பகம், நாகப்பட்டினம். அலைபேசி:9952326742. பக்.80. விலை ரூ 100/-.             "அட! இத நம்ம கூட எழுதியிருக்கலாமே"     என்று எந்தக் கவிதை […]

மேலும் படி
மேல் செல்