இரண்டாம் உலகப் போர் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போருக்குப்பின் பொருளாதார சீர்குலைவு, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற சிக்கல்கள் ஒருபுறமும், மக்களை வாட்டி வதைத்தன. மறுபுறம் பதுக்கல், கள்ளச்சந்தை போன்ற சமூக விரோத செயல்களும் செழித்துப் பெருகின. இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் அன்றைய சமூகத்தில் நிலையற்றத் தன்மையை ஏற்படுத்தின. இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து அதிகாரத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிராகக் குரல் எழுப்பினர். வங்காளத்தில் தெபாக போராட்டம், தெலுங்கானாவில் நிஜாம்களுக்கெதிரான விவசாயக் கூலிகளின் போராட்டம், […]