கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
மழை வெளி காற்றுக்கும் தன்னைப் பதப்படுத்துதல்
யவனிகா ஸ்ரீ ராம்

ஒரு மொழியில் கவிதைகள் கருக்கொள்ளும்  காலம் இடம் போன்றவை பொருள் வயமான இவ்வுலகின் காலா தீத அவதானங்களாக இருப்பதன்றி சில வேளைகளில் தன்னில் பிறரையும் பிறரை தன்னிலும் உணரும்  உறவாகவும் அதே நேரம் தன்னுணர்ச்சிகளின் திளைப்பாகவும் விருப்ப வேட்கையாகவும் சுருங்கச் சொன்னால்  ஒருவகையில்  தன் வலியின்  மகிழ்வின் மீதுணர்ந்த சுதந்திரத்தின் எல்லைகளை அழகியலாக  வரைவதுடன் தான் அல்லாத மற்றமைக்குத் தோதாக காட்சிப்படுத்தும் கலையாகவும்  போக அதைப் பொதுவெளிக்கு இப்படியாகக் கையளித்தும் விடுகின்றன.  அதனளவில் அதற்குள் உண்டாகும் பிம்பங்களும் […]

மேலும் படி
ஆன்மீகத்திற்கும் கலைக்கும் இடையே இயங்கும் மீமெய்மைகளின் பிரதி (தேவேந்திரபூபதியின் வாரணாசி கவிதைத் தொகுப்பை முன்வைத்து...)
யவனிகா ஸ்ரீராம்

எந்தவொரு தேசத்தின் கவிதைகளையும் அது எந்த மொழியில் இருப்பினும் இரண்டுவிதமாகப் பார்க்கலாம். ஒன்று, காலகாலமான மனிதனின் வரலாற்றுத் தடங்கள் மிகுந்தவை. இன்னொன்று, அருகிவிட்ட விலங்குகளின் தடங்களைத் தேடி அவற்றை எண்ணிக்கையிடுவது. முதல்வகைக் கவிதைகளுக்கு எப்போதும் ஆவணங்கள் உண்டு.அவை பெரும்பாலும் வரலாற்றை, பண்பாட்டை, கலாச்சாரத்தை நம்பியிருப்பவை. மனித உயிர்  உணர்ச்சிகளை அல்லது மனிதனாக இருப்பது குறித்து பிரலாபித்துக்கொள்பவை. அவை இடம், காலம் போன்றவற்றில் தன் புழங்கும் மொழியை அற்புதமாக்குபவை. மிகையுணர்ச்சிக்கும் தனது மனிதப்பார்வைகளுக்கு இடையே சாராம்சத்தை நிலைநிறுத்த முயல்பவை. […]

மேலும் படி
மேல் செல்