கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
முறையிட ஒரு கடவுள்-சர்வோத்தமன் சடகோபன் கதைகளை முன்வைத்து
ஞா.தியாகராஜன்

எந்த அறிவுத்துறையிலும் பயன்படுத்துவதற்குரிய ‘தொண்ணூறுகளுக்குப் பிறகான’ என்னும் வரையறையை சர்வோத்தமனின் ‘முறையிட ஒரு கடவுள்’ சிறுகதை தொகுப்பிற்கு பயன்படுத்தலாம். சடகோபனின் பாத்திரங்கள் கோட்பாடுகளால், தத்துவங்களால், கருத்தியல்களால் உளச்சிக்கல்களுக்கு ஆளாகுபவர்கள். இந்தச் சந்தை மயமாக்கப்பட்ட உலகத்தில் தனது அடையாளத்தை எதன் மூலமாவது நிறுவிக்கொள்ள முயன்றுகொண்டிருப்பவர்கள். அது முடியாமல் அலைக்கழிபவர்கள். ஒரு வகையில் இவற்றின் படைப்பாக்கம் சுயத்திலிருந்து புனைவுக்கு நகர்கிறது. இதில் எங்கேயாவது படைப்பாளரை வாசகன் கண்டுகொள்ளக் கூடிய வாய்ப்பிருக்கிறது. சிற்றிதழ் மரபின் தற்போதைய தீவிர இலக்கியம் என்னும் வரையறைக்கு […]

மேலும் படி
மேல் செல்