ஏனெனில் இந்நூற்றாண்டின் அரசியலென்பது ‘சர்வவியாபகம்’ கொண்டது. மனிதனின் ஒவ்வொரு தெரிவிலும் விருப்பத்திற்கு மாறாக விளம்பர உலகின் கருத்தியல் திணிப்புகளைச் செயலாற்றுகின்றன. இந்த நீரோட்டங்களில் வழியாகச் சமீபத்தில் வெளியாகியுள்ள நவீன கவிதைப்பிரதிகளில் இடம்பெறும் சமகால அரசியல் உணர்வுகளை இக்கட்டுரை கோடிட்டுக்காட்டுகிறது. நவீன இலக்கிய ஆக்கங்களில் அரசியல் என்பது தவிர்க்க முடியாததாகும். உள்ளொளி, தரிசனம் போன்ற பேறுகளிலிருந்து தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிதை புதிய கதியில் இயங்க தொடங்கியது. பெண்ணியமும், தலித்தியமும், பிற நவீன கோட்பாடுகளும் மனிதனைச் சுற்றி கவியும் அரசியலை […]