கவிதைக்கான வாசிப்பு பயிற்சியென்பது தமிழ் சூழலில் பெரும்பான்மையும் ரகசிய செயல்பாடுதான். பயிற்சி என்பதே அந்நியமாகத் தோன்றும் அளவுக்கு அது மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. அதிகம் புழங்கும் வடிவமாகவும் அதே அளவுக்கு நிராகரிக்கப்படும் வடிவமாகவும் கவிதை இருக்கிறது. கவிதை சார்ந்த ஒருவித செவ்வியல் வாசிப்பும், கொஞ்சம் நிதானமான ரொமாண்டிக் வகைமைகள் மட்டுமே தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டும் படைக்கப்பட்டும் வருகிறது. கவிதை தளத்திற்கான சரியான விமர்சனங்கள் மற்றும் செறிவான கட்டுரைகளில் நிலவும் போதாமை ஆகியவை காரணமாகக் கவிதை வடிவத்தில் ஆர்வம் கொள்ளும் புது வாசகனும் […]