நிறமே ஒளியை வெளிப்படுத்த உதவுகிறது, இயற்பியல் நிகழ்வல்ல, ஆனால் இருக்கும் அந்த ஒற்றை ஓளி, கலைஞனின் மூளையில் உள்ளது - ஹென்றி மாத்தீஸ். தென்னிந்திய கோயில்களின் இருண்ட கூடங்களில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுவரோவியங்களை வரைந்த பழம்பெரும் ஓவியர்கள் பெரும்பாலும் பெயரடையாளமற்று இருப்பதொன்றும் ஆச்சர்யமானதல்ல. அச்சுவரோவியங்கள் ஒரு தனி நபரால் அல்லது பண்டையகால ஓவியர் குழுவால் உருவாக்கப்பட்டதா என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது கதை வேறு. இன்று நாம் அக்கலைஞனை ரத்தமும் சதையுமாக அவன் கித்தான் […]