கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
வெர்னர் ஹெர்சாக்: கவிப்பித்தின் பெருவெளி
ஸ்வர்ணவேல்

வெர்னர் ஹெர்சாக் – இந்த ஜெர்மானியப் பெயர், திரைப்பட உலகின் வரைபடங்களில் ஒரு சாதாரணப் புள்ளி அல்ல; அது ஒரு பிரமாண்டமான, புதிரான நிலப்பரப்பு. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, எழுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், எண்ணற்ற ஆவணப்படங்கள், சில ஓபராக்கள், புத்தகங்கள் என விரியும் இவரது படைப்புலகம், சினிமா ரசிகர்களின் இதயங்களிலும் சிந்தனைகளிலும் ஆழமான, சில சமயங்களில் கலவரமூட்டும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் வெறும் திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல; இவர் ஒரு தத்துவஞானி, ஒரு தீராத பயணி, அடங்காத […]

மேலும் படி
எதிர்க்கின்றேன் - எதிர்த்தலால் இருக்கின்றேன்
தமிழச்சி தங்கபாண்டியன்

"We make the mistake of thinking that language will somehow clarify things between us and the native: நமக்கும், பூர்வகுடியினருக்கும் இடையே நிலவும் சில தடைகளை மொழியானது தெளிவுபடுத்திவிடும் என்று நினைக்கிற தவற்றை நாம் செய்கிறோம். - Vincent O 'Sullivan (Billy 1990 : 13) கிராமம் - நகரம் என்ற வித்தியாசங்கள் எதிர்காலத்தில் மனித அனுபவத்தில் சாத்தியம்தானா? இனியும் மனிதர்கள் வேர்களைத்தேடக் கூடிய இலக்கியம் சாத்தியப்படுமா? எனும் மிக […]

மேலும் படி
கூர்மையான கண்ணாடித்துண்டுகளில் சித்தாந்தத்தின் பெரும் சுமை
றியாஸ் குரானா

இருபத்தோராம் நூற்றாண்டின் மனித இருப்பு என்பது, கணினித் திரைகளின் நீல ஒளிச்சுடரில் கரைந்தும், சமூக வலைத்தளங்களின் எண்ணற்ற பிம்பங்களால் சிதறுண்டும், மொழியின் மீது கொண்ட நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்தும் போன ஒரு புதிர்ப்பாதை. இந்த டிஜிட்டல் பெருவெளியில், மனிதனின் அகவுலகம் அனுபவிக்கும் தனிமையையும், அந்நியமாதலையும், அர்த்தமின்மையையும் பதிவுசெய்யப் பழைய கவிதை மொழிகளும், மரபான அழகியல் மனோரதிய நினைவுகளும் போதுமானதாக இல்லை. இந்தச் சவால் மிகுந்த வரலாற்றுத் தருணத்தில், சமகாலத் தமிழ்க் கவிதைக்கு ஒரு புதிய திசையையும், […]

மேலும் படி
புளிப்பைச் சுவைக்கும் இனித்த முகங்கள்
ஜார்ஜ் ஜோசப்

1 செழிப்பும் வளமும் நிறைந்த புலத்தினருகே உரிய நிறைவையும் உணர்ச்சி ஊசலாட்டங்களையும் உழைப்பையும் பேசும் தன்மைகொண்ட கதைகளை எழுதியவர் சி.எம்.முத்து. அவரது சமீபத்திய வரவான ‘புளிப்புக் கனிகள்’ என்ற சிறுகதைத் தொகுதியிலுள்ள பெரும்பாலான கதைகள் அவர் எழுத வந்த ஆரம்பநாள்களில் வெளியானவை. சற்றொப்ப நாற்பதைம்பது கால இடைவெளி கொண்டவை. ஒரு எழுத்தாளரின் ஆரம்பகாலக் கதைகள், அவரது எழுத்தின் வளர்ச்சிப் போக்கை உணரப் பெரிதும் உதவுபவை எனும் நோக்கில் முக்கியமானவை. அதேவேளை இத்தொகுப்பில் அவர் சமீபத்தில் எழுதிய கதைகளும் […]

மேலும் படி
கருவிகளின் வழியே அவதானிக்கப்படுகிற கரங்களின் கதைகள்
வருணன்

“வரலாற்றை மிக நேர்த்தியாக ஆக்கிக் காண்பிப்பதை விட அதற்குள்ளிருக்கும் மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகளை நேர்மையாகச் சொல்ல வேண்டிய தேவை கலைக்கு எப்போதும் இருக்கிறது.” இத்தொகுப்பின் ஆசிரியர் குறிப்பிலிருக்கும் கவிஞர் ஜீவன் பென்னியின் வார்த்தைகளிவை. “அதிகாரத்தை எதிர்த்துப் பேசுவதென்பது அது தாங்கி நிற்கும் ஆயுதத்தின் கூர்மையை நோக்கி பேசுவதில் தான் துவங்குகிறது” என்பதாக அக்குறிப்புத் தொடங்குகிறது.தொகுப்பின் ஒட்டுமொத்த கவிதைகளின் அடிநாதத்தையும் அவற்றின் நோக்கத்தையும் இவ்வாக்கியங்களே கச்சிதமாய் உணர்த்திவிடுகின்றன. நினைக்கும்போதே கிளர்ச்சியூட்டும் நிரந்தரப் பேரதிகாரமெனும் பெருங்கனவின் மீது இச்சை கொள்கிற […]

மேலும் படி
அதிகார நுண்களமும் பாசிச எந்திரமாகும் உடல்களும் : பெருமாள்முருகன் படைப்புகளில் உடலரசியல்
இரா. சண்முகப்பிரியா,

மனித இயக்க ஆற்றலின் முக்கிய உற்பத்தியாக அமைவது மொழியே. காலந்தோறும் இலக்கிய, இலக்கண உருவாக்கங்கள் யாவும் மொழியின் ஊடாக, மொழிச் சமூகத்தில் இயங்கும் உடல்களைக் குறிப்பிட்ட அதிகார ஒழுங்கில் கட்டமைக்கின்றன. இங்கு அதிகாரத்தை எதிர்ப்பது அதன் முதல்நிலையில் மொழியை எதிர்ப்பதாகும். பின்காலனிய இலக்கிய வகைமைகள் மொழியைக் கைக்கொள்ளும் அரசியலையும், சொல்லாடல்கள் எனும் குறித்திறப்புச் சொற்களை அழகியலாக மையப்படுத்தியதையும் இப்பின்னணியினின்று விளங்கிக்கொள்ளலாம். மொழியின் வழியாக அதிகாரக் கருத்துருவங்கள் பாவிநிற்கும் உடல்களை வெளிக்கொணர, மொழியில் ஓர் உடைப்பினை நிகழ்த்தவேண்டியது இன்றியமையாதது. […]

மேலும் படி
மேல் செல்