கதையையே கவிதையாகச் சொன்ன காவிய மரபின் தொடர்ச்சியிலிருந்து, கவிதையைக் கதையாகச் சொல்லும் எடுத்துரைப்பு முறைமைகளின் புதிய திசைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இது கவிதையின் மாறக்கூடிய பகுதிகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களில் ஒன்று. இது பின்நவீனத்துவக் கவிதைகளின் நிலை. இப்படி எத்தனையோ மாற்றங்களைக் கவிதையில் ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடிகளுக்குள் நின்றுதான் கவிதையை இன்று அணுக வேண்டியிருக்கிறது. ஆனால், அலறியின் கவிதைகள் நவினத்துவப் பண்புகளையே அதிகம் கொண்டிருப்பதால், இத்தனை நெருக்கடிகளையும் ஒரு புறத்தில் வைத்துவிட்டு, என்ன சொல்கிறது? என்ன செய்ய முற்படுகிறது? அதன்வழியாகத் தன்னை […]