ஒரு மொழியில் கவிதைகள் கருக்கொள்ளும் காலம் இடம் போன்றவை பொருள் வயமான இவ்வுலகின் காலா தீத அவதானங்களாக இருப்பதன்றி சில வேளைகளில் தன்னில் பிறரையும் பிறரை தன்னிலும் உணரும் உறவாகவும் அதே நேரம் தன்னுணர்ச்சிகளின் திளைப்பாகவும் விருப்ப வேட்கையாகவும் சுருங்கச் சொன்னால் ஒருவகையில் தன் வலியின் மகிழ்வின் மீதுணர்ந்த சுதந்திரத்தின் எல்லைகளை அழகியலாக வரைவதுடன் தான் அல்லாத மற்றமைக்குத் தோதாக காட்சிப்படுத்தும் கலையாகவும் போக அதைப் பொதுவெளிக்கு இப்படியாகக் கையளித்தும் விடுகின்றன. அதனளவில் அதற்குள் உண்டாகும் பிம்பங்களும் […]