கவிதைகள் காட்சிமொழி (Figurative language) சார்ந்து உறுதிபெறும்போது அவற்றின் கட்டமைப்பு அதிகக் கவனம் பெறமுடியும் அல்லது கவிதையின் அமைப்பை உருவற்றது(formless) என நிறுவ முடியும். அது கவிதைக்குரலின் மொழிவை அதன் படிமங்களிலிருந்தும் குறியீடுகளிலிருந்தும் தொன்மங்களிலிருந்தும் வடிவக்குறையிலிருந்து மேம்படுத்தலாம். அப்படி ஈழத்துக் கவிஞர் அனாரின் கவிதைகளை நுண்மை சார்ந்து அணுகமுடியும். ஜின்னின் இருதோகை தொகுப்பிலிருந்து அவருடைய கவிதைகள் கவிதைக்குரலின் மனோவியல் (Psychoanalytical) தொடர்பிலான ஆய்வொன்றை கட்டமைப்பு சார்ந்து வேண்டி நிற்கின்றன. அது விரிவாக ஆராயப்படவேண்டியதொன்று. "செவ்வகத்தை நான் வரைகிறேன் […]