செல்வ சங்கரனின் ஆறாவது தொகுப்பான ‘மத்தியான நதி’ சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘பறவை பார்த்தல்’ தொகுப்பிலிருந்து அவருடைய கவிதைகளுடனான எனது பரிச்சயம் தொடங்குகிறது. கவிதையெழுத முனைபவர்களின் ஆரம்பகாலப் பிரயாசைகள் எத்தனங்கள் ஆகியவற்றை இத்தொகுப்பில் காணலாமென்றாலும் இரண்டாவது தொகுப்பான ‘கனிவின் சைஸ்’லிருந்து கவிதையின் நெடிய போக்கில் தன் இடத்தை உறுதிப்படுத்த விரும்பும் அவருடைய முயற்சிகள் தொடங்கியதெனலாம். சொற்களின் குறைவான பயன்பாடும் அதன்மூலமான எல்லையற்ற அர்த்தவிரிவும்தான் கவிதையின் பொது அடையாளமாகக் கூறப்படும் சூழலில் அதற்கு நேரெதிரான வகைமாதிரியாகச் செல்வசங்கரன் தனது கவிதைகளை […]