கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
மழை வெளி காற்றுக்கும் தன்னைப் பதப்படுத்துதல்
யவனிகா ஸ்ரீ ராம்

ஒரு மொழியில் கவிதைகள் கருக்கொள்ளும்  காலம் இடம் போன்றவை பொருள் வயமான இவ்வுலகின் காலா தீத அவதானங்களாக இருப்பதன்றி சில வேளைகளில் தன்னில் பிறரையும் பிறரை தன்னிலும் உணரும்  உறவாகவும் அதே நேரம் தன்னுணர்ச்சிகளின் திளைப்பாகவும் விருப்ப வேட்கையாகவும் சுருங்கச் சொன்னால்  ஒருவகையில்  தன் வலியின்  மகிழ்வின் மீதுணர்ந்த சுதந்திரத்தின் எல்லைகளை அழகியலாக  வரைவதுடன் தான் அல்லாத மற்றமைக்குத் தோதாக காட்சிப்படுத்தும் கலையாகவும்  போக அதைப் பொதுவெளிக்கு இப்படியாகக் கையளித்தும் விடுகின்றன.  அதனளவில் அதற்குள் உண்டாகும் பிம்பங்களும் […]

மேலும் படி
பிரஞ்ஞை பூர்வ கலைகளின் மதிப்பு நீக்கம் – செல்வசங்கரன் கவிதைகள் குறித்து...
ஞா.தியாகராஜன்

செல்வ சங்கரனின் ஆறாவது தொகுப்பான ‘மத்தியான நதி’ சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘பறவை பார்த்தல்’ தொகுப்பிலிருந்து அவருடைய கவிதைகளுடனான எனது பரிச்சயம் தொடங்குகிறது. கவிதையெழுத முனைபவர்களின் ஆரம்பகாலப் பிரயாசைகள் எத்தனங்கள் ஆகியவற்றை இத்தொகுப்பில் காணலாமென்றாலும் இரண்டாவது தொகுப்பான ‘கனிவின் சைஸ்’லிருந்து கவிதையின் நெடிய போக்கில் தன் இடத்தை உறுதிப்படுத்த விரும்பும் அவருடைய முயற்சிகள் தொடங்கியதெனலாம். சொற்களின் குறைவான பயன்பாடும் அதன்மூலமான எல்லையற்ற அர்த்தவிரிவும்தான் கவிதையின் பொது அடையாளமாகக் கூறப்படும் சூழலில் அதற்கு நேரெதிரான வகைமாதிரியாகச் செல்வசங்கரன் தனது கவிதைகளை […]

மேலும் படி
நான்தான் ஔரங்கஸேப்
ரமேஷ் கல்யாண்

காத்திப்  என்றழைக்கப்படும்  எழுத்தாளன், ஒரு அகோரியின் உடலில் பாபரின்  ஆவி வந்து புகுந்திருக்கும்போது,  அதனுடன் உரையாடலாம் என்று திட்டமிட்டிருக்கையில், ஔரங்கஸேப் ஆவி வந்து பேசுகிறது எனும் கற்பனையும் எதிர்பாராமையும், கிண்டலுடன் வரலாறு பார்க்கப்படுவதும்,  ஒரு பின் நவீனத்துவ நாவலுக்கு படிப்பவரை தயாராக்கிவிடுகிறது. ஔரங்கஸேப், உரையாடும் காத்திப், நாவல் எழுதும் சாரு என்று மூன்று வாசகப் பிரதேசங்கள் நாவலில் உள்ளன. முகலாய மன்னன், சமகால விஷயங்கள் கிண்டல் தொனிக்கும் இடங்கள், போன்றவை முன்கதைத் துவக்கத்தில் ‘சோ’ வின் ஒரு […]

மேலும் படி
கவிஞர் வெய்யிலின் "அக்காவின் எலும்புகள்"
- ஓயவே ஓயாத தொனிகளின் உற்பத்திக் களம்-  
க.பஞ்சாங்கம்

                                                        வெய்யில், '"அக்காளின் எலும்புகள்", (2018),, கொம்பு பதிப்பகம், நாகப்பட்டினம். அலைபேசி:9952326742. பக்.80. விலை ரூ 100/-.             "அட! இத நம்ம கூட எழுதியிருக்கலாமே"     என்று எந்தக் கவிதை […]

மேலும் படி
நொய்யல் – கரைகளைக் கடந்து செல்லும் பேரன்பின் பிரவாகம்.
ஜீவன் பென்னி

‘நொய்யல் – நாவல் – தேவிபாரதி – தன்னறம் பப்ளிகேஷன் – ஆகஸ்ட் 22 – விலை- ரூ.800.    காலத்தை அதன் போக்கில் வரையறுப்பதில், வெறுமனே சமன் செய்து காண்பிப்பதில் தேவிபாரதி அவர்களுக்கு எப்போதும் ஆர்வமிருந்ததில்லை. வரலாற்றாய்வாளர்கள் குவித்திருக்கும் புதைமேடுகளின் புழுதிகளுக்குள் சென்று அதன் ஆழ்மனதில் நிலைபெற்றிருக்கும் காய்ந்த ஒரு வலியின் தடத்தையும், பெரும் வாழ்வையும் தீவிர மொழியில் படைப்புகளாக்கவே அவர் முயல்கின்றார். தினசரிகளின் வாசல்களில் சதா முட்டிக்கொண்டிருக்கும் கடந்த காலத்தின் மிச்சங்களில் சொல்வதற்கெனயிருந்திடும் கணக்கற்ற […]

மேலும் படி
நிஜங்களின் புனைகதையாளர் – எம்.சுகுமாரன் எழுத்துகளை முன்வைத்து..
- ஞா.தியாகராஜன்

அரசியல் அதிகாரத்தின் எல்லா விளைவுகளையும் தீர்க்கமாக ஆராய்வதும் அவற்றை இலக்கியத்தில் பதிவு செய்வதுமான ஒரு போக்கை மலையாள இலக்கியத்தில் அதிகமும் காண முடியுமென நினைக்கிறேன். பல்வேறு மாநிலங்கள் தேசிய கட்சிகள் கோலோச்சுவதாகக் காணப்பட்டாலும் அவற்றிலிருந்து கேரளத்திற்கு மட்டும் தனியொரு சிறப்பு எப்போதும் வாய்த்திருக்கிறது. நம்பூதிரிபாட் முதலமைச்சராக இருந்த காலத்தில் மக்கள் போராட்டத்திற்கு எதிராகக் காவல்துறையைப் பயன்படுத்தக்கூடாது எனச் சட்டம் இயற்றப்பட்டதாகத் தோழர் தியாகு காணொளி ஒன்றில் கூறுகிறார். மக்கள் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் இதே மண்ணிலிருந்து தோன்றிய எம்.சுகுமாரனின் […]

மேலும் படி
இமையத்தின் சிறுகதைகள் திறக்கும் சாளரங்கள்
எம்.டி.முத்து குமாரசாமி

“சாவு சோறு”, இமையம், சென்னை, க்ரியா, 2014, பக்கங்கள் 160; விலை ரூபாய் 170; ISBN 978-93-82394-11-2 இமையம் சமீபத்தில் எழுதிய சிறுகதைகளிலேயே ஆகச் சிறந்த எட்டு கதைகளின் தொகுப்பாக “சாவு சோறு” வெளிவந்திருக்கிறது. தலைப்பு “சாவுச்சோறு” என்று ஒற்றுப்பிழையின்றி இருந்திருக்க வேண்டும்; இதுதான் போகிறது என்றால், உள்ளடக்கப் பக்கத்தில் தலைப்புக் கதையின் பெயர் “சாறு சோறு” என்று பிழையுடன் அச்சாகியிருக்கிறது. க்ரியா பதிப்பகம் மெய்ப்புத் திருத்துவதற்கும், புனைவுகளைத் திருத்துவதற்கும் பெயர்போன பதிப்பகமாயிற்றே தலைப்புகளே இப்படிப் பிழைகளுடன் […]

மேலும் படி
வேட்டுவம் நூறு
நூல் விமர்சனம்
வசுமித்ர

பாட்டுக்களின் தாய், நமது விதை முழுவதின் தாய் ஆரம்பத்தில் நம்மைப் பெற்றெடுத்தாள் அவள் எல்லா இன மனிதர்களின் எல்லாக் குலங்களின் தாய். அவள் இடியின், நதிகளின் மரங்களின், தானியத்தின் தாய் அவள் மட்டுமே. நமக்குத் தாய் அவள் மட்டுமே எல்லாவற்றின் தாய் அவள் மட்டுமே. -கொலம்பியாவின் கயாபா இந்தியர்களின் பாடல் மௌனன் யாத்ரீகா தனது கவிதைகளின் முன்னுரையில் வேட்டை குறித்தான கவிதைகள் எழுத முடிவு செய்ததும், அதுவரை வேட்டை சம்பந்தமாக வந்திருந்த ஒலி, ஒளி, மற்றும் புத்தகங்கள் […]

மேலும் படி
மரக்கறி - சாதாரணத்தை அசாதாரணமாக்கும் கருப்பு அற்புதம்
ஷாராஜ்

மரக்கறி – கொரிய நாவலாசிரியை ஹான் காங்கின் நாவல். 2016-ல் சர்வதேச மேன்புக்கர் விருது பெற்றது. ஆங்கில மொழிபெயர்ப்பு: டெபோரா ஸ்மித். தமிழில்: சமயவேல். வெளியீடு: தமிழ்வெளி. பக்கங்கள்: 224. விலை: ரூ.220. தமிழில் வெளியான முதல் கொரிய நாவல் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். கொரிய இலக்கியம் அவ்வளவு பிரபலமானதல்ல. ஆனால், மில்லேனியம் வாக்கிலிருந்து கொரியக் கலைத் திரைப்படங்கள் உலக அளவிலும், தமிழக கலைத் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம். நமது இலக்கியவாதிகளில் பலரும் கொரிய […]

மேலும் படி
பிரதாப ருத்ரன் கவிதைகள் – ஒரு பார்வை :
ஜீவன் பென்னி

                                                                                        1. மழை மியூசியம் (2014) – புது எழுத்து, 2. கடலாடும் கல் ஓவியம் (2017) – மையம் வெளியீடு , 3. பியானோ திசை பறவை (2020) – சொற்கள் வெளியீடு. தன் நிலத்தில் படர்ந்திருக்கும் உயிரினங்களின் மொழியை எழுதுதல் அல்லது அதன் பேரன்பைக் கட்டியிழுத்துக் கொண்டு பயணித்தல் : ‘அனுபவத்தை வடிவமைக்கும் போது கவிதை ஒரு முழு முற்றானதும் இதுவரை சாத்தியத்திற்கே வந்திராததுமான முழுமையின் ஒரு சிறிய பங்கைப் பிரதிநிதித்துவம் செய்கிறது’ - […]

மேலும் படி
1 2 3 4
மேல் செல்