கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்: ஒரு வாசிப்புரை
யவனிகா ஸ்ரீராம்

ஒரு வெள்ளையன் கடல்வழியாக ஒரு கறுப்பனுடன் இணைக்கப்படாதவரை இருவருக்கும் தங்களது நிலப்பரப்பு என்பது ஒரு கிரகமாகவும் மற்றொரு நிலப்பரப்பு அந்நிய கிரகமாகவும் மட்டுமே புனைவாகிறது… (தனது கட்டுரைத் தொகுப்பிலிருந்து ஜமாலன்) மொழியும் நிலமும் என்ற கட்டுரைத் தொகுப்புக்குப் பிறகு 2010இல் வெளிவந்த ஜமாலனின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு ‘நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்’ என்ற புலம் வெளியீட்டுப் புத்தகம். ஏறக்குறைய உலகின் அனைத்து நிகழ்வுகளும், புதிய கட்டமைப்புகளும் நிகழ்ந்துவிட்ட 19ஆம் நூற்றாண்டு தொடங்கி சமகாலம் வரை உருவான […]

மேலும் படி
மூதந்தை திருவெழுத்து
மஞ்சுநாத்

மனித மனம் ஒரு வடிவமைப்புக்குள் பொருத்திக் கொள்வதற்கு ஒருபோதும் விரும்புவதில்லை. அதன் இயல்பும் விரிவடையும் வெளியும் எல்லையற்றது. ஆனால்  மன எல்லையின் விரிவடையும் சாத்தியத்தை வாசகன் தனது செளகரியத் தன்மைக்கு பங்கம் வராது சுய விருப்பம் கொண்டு முடமாக்கி விடுகிறான். ஏதோவொரு வகையில் அசெளகரியமானதாக கருதப்படும் படைப்புகளின் தரிசனங்களை தவற விடுவதற்கு கூர்மையான வாசிப்புத்திறன் இல்லாமையே காரணம். இதனால் தொடர்ந்து தனது விருப்பத்தை சொறிந்துவிடும் படைப்புகள் மீது மட்டுமே செலுத்துகிகிறான். தமிழ் வாசகப்பரப்பு இதய பலவீனம் கொண்டதாகவும் […]

மேலும் படி
ஜி. நாகராஜனின் படைப்புலகம்
மனுஷ்யபுத்திரன்

(1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை) தமிழின் நவீன இலக்கிய வெளியில் மத்தியதர வாழ்வின் ஆசாபாசங்களும் பெருமூச்சுகளும் மதிப்பீடுகளும் நம்மை மிகவும் ஆயாசமடைய வைத்துள்ளன. இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் வாழ்க்கையின் பரப்பு சின்னஞ்சிறியது; சில உயர் இடைநிலை சாதிகளின் _ வர்க்கங்களின் அனுபவத்திலிருந்தும், கண்ணோட்டத்திலிருந்தும் உருவாக்கப்பட்டது. மத்தியதர வாழ்வின் அறவியல் அழகியல் பிரச்சனைகள் தமிழ் இலக்கியத்தின் பிரச்சனைகளாக இருந்து […]

மேலும் படி
நவீன கவிதைகளில் சமகால அரசியல் உணர்வு
ஞா.தியாகராஜன்

ஏனெனில் இந்நூற்றாண்டின் அரசியலென்பது ‘சர்வவியாபகம்’ கொண்டது. மனிதனின் ஒவ்வொரு தெரிவிலும் விருப்பத்திற்கு மாறாக விளம்பர உலகின் கருத்தியல் திணிப்புகளைச் செயலாற்றுகின்றன. இந்த நீரோட்டங்களில் வழியாகச் சமீபத்தில் வெளியாகியுள்ள நவீன கவிதைப்பிரதிகளில் இடம்பெறும் சமகால அரசியல் உணர்வுகளை இக்கட்டுரை கோடிட்டுக்காட்டுகிறது. நவீன இலக்கிய ஆக்கங்களில் அரசியல் என்பது தவிர்க்க முடியாததாகும். உள்ளொளி, தரிசனம் போன்ற பேறுகளிலிருந்து தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிதை புதிய கதியில் இயங்க தொடங்கியது. பெண்ணியமும், தலித்தியமும், பிற நவீன கோட்பாடுகளும் மனிதனைச் சுற்றி கவியும் அரசியலை […]

மேலும் படி
தொகுப்பாக்கமும் சமகால உரையாடலும் – ‘தமிழ் நாவல் எழுத்தில் அண்மைக்காலப் போக்குகள்’ நூலை முன்வைத்து..
ஞா.தியாகராஜன்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘தமிழ் நாவல் எழுத்தில் அண்மைக்காலப் போக்குகள்’ என்னும் பொருண்மையிலான கருத்தரங்கத்தின் தொடர்ச்சியாக நிகழ்வில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகள் தமிழவன் அவர்களால் தொகுக்கப்பெற்று அதே தலைப்பில் சாகித்ய அகாடெமி வெளியீடாக நூலாக்கம் பெற்றுள்ளது. தமிழின் நவீன இலக்கியம் சார்பாக எடுக்கப்படும் பலதரப்பிலான முயற்சிகளில் தமிழவனை ஒரு சிந்தனைப்பள்ளியாகக் கொள்ளலாம். பின்நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தி அதில் ஒரு தொடர்ச்சியைத் தோற்றுவித்தவர் என்ற அடிப்படையில் அன்னாரின் முயற்சி ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. நவீன இலக்கியத்திற்குக் கல்விப்புல வழியாகப் […]

மேலும் படி
தமிழ்ச் சமூகத்தில் ஷாமன்கள் ஆளுவோராக இருந்ததில்லை!
கா.விக்னேஷ்.

நூலறிமுக கட்டுரை ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்’ எனும் ஆ.சிவசுப்பிரமனியனின் நூல், தமிழர்களின் தொல்சமயக் கூறுகளை இனங்காணும் குறிப்பிடத் தகுந்த நூலாகும். தற்கால அரசியல் சூழலில் மிக அத்தியாவசியாமான விவாதத்தை முன்னெடுக்கும் வாய்ப்பினை இந்நூல் ஏற்படுத்தித் தந்துள்ளது. தொல்சமயம், இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும், இறந்தோர் வழிபாட்டின் சிதைவும் புராண மூதாதையர், இறந்தோர் வழிபாட்டின் எச்சமென இயல்கள் பகுக்கப்பட்டு அப்பொருண்மைகள் குறித்துக் காரணகாரியங்களுடன் விவாதத்தை மேற்கொண்டுள்ளார் நூலாசிரியர். நிறுவனவயப்பட்டச் சமயங்களான பௌத்தம், சமணம், […]

மேலும் படி
செந்நீராலும் கண்ணீராலும் கட்டமைக்கப்பட்ட பொதுவுடைமை இயக்கத்தின் வரலாறு – கே.வி. மோகன்குமாரின் “உஷ்ணராசி”
முனைவர் இரா. செங்கொடி

இரண்டாம் உலகப் போர் அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போருக்குப்பின் பொருளாதார சீர்குலைவு, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற சிக்கல்கள் ஒருபுறமும், மக்களை வாட்டி வதைத்தன. மறுபுறம் பதுக்கல், கள்ளச்சந்தை போன்ற சமூக விரோத செயல்களும் செழித்துப் பெருகின. இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் அன்றைய சமூகத்தில் நிலையற்றத் தன்மையை ஏற்படுத்தின. இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து அதிகாரத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிராகக் குரல் எழுப்பினர். வங்காளத்தில் தெபாக போராட்டம், தெலுங்கானாவில் நிஜாம்களுக்கெதிரான விவசாயக் கூலிகளின் போராட்டம், […]

மேலும் படி
எழுத்தில் படிந்த நிலம்
ப்ரேம் ரமேஷ்

(கி.ரா. : ஒரு பின் நவீனத்துவ மிகை வாசிப்பு) பேச்சு முடியும் இடத்திலிருந்து எழுத்து தொடங்குகிறது. எழுத்து தொடங்கும் இடத்திலிருந்து மௌனம் என்பது பேச ஆரம்பிக்கிறது. மௌனம், பேச்சு, எழுத்து என அனைத்தும் ஊடாடும் களத்தில் கதையாக்கம் நிகழ்கிறது. எல்லா மொழிகளும் புனைவிலிருந்தும் பாவனைகளிலிருந்தும் தொடங்குகின்றன. இந்த புனைவுகளும் பாவனைகளும் மனிதர்களை உற்பத்தி செய்து தருகின்றன.மனிதர்களை உற்பத்தி செய்து உலவவிடும் இந்தப் புனைவுகளும் பாவனைகளும் பெரும் பரப்பாக,சூழ்வெளியாக மனிதர்களைக் கவிந்து கிடக்கின்றன. மனித நிலைகளின், சேர்க்கைகளின் அலைவும் […]

மேலும் படி
கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு
எம்.டி.முத்துக்குமாரசாமி

மறைந்த மலையாள விமர்சகர் கிருஷ்ணன் நாயர் அவருடைய புகழ் பெற்ற கலாகோமுதி வாராந்திர பத்தியில் பல வருடங்களுக்கு முன் எக்சிஸ்டென்ஷியலிசம் அதிகம் புழங்கப்பட்ட மலையாள இலக்கிய சூழல் குறித்து எழுதியிருந்தார். கிருஷ்ணன் நாயர் பள்ளிகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் ஆய்வாளராக பணியாற்றியவர். அவர் தன் பணி நிமித்தமாக ஒரு பள்ளிக்குப் போக நேர்ந்தது. அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் அதிகமான வேலைப் பொறுப்பில் இருப்பதான தோரணையைக் காட்டிகொண்டு கோப்புகளை பார்த்துக்கொண்டே கிருஷ்ணன் நாயரை தனக்கு எதிரில் […]

மேலும் படி
சமகால கவிதைகளில் தொடரும் தேக்கமும் சில கவிதைகளின் வாசிப்பும்
ஞா.தியாகராஜன்

கவிதைக்கான வாசிப்பு பயிற்சியென்பது தமிழ் சூழலில் பெரும்பான்மையும் ரகசிய செயல்பாடுதான். பயிற்சி என்பதே அந்நியமாகத் தோன்றும் அளவுக்கு அது மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. அதிகம் புழங்கும் வடிவமாகவும் அதே அளவுக்கு நிராகரிக்கப்படும் வடிவமாகவும் கவிதை இருக்கிறது. கவிதை சார்ந்த ஒருவித செவ்வியல் வாசிப்பும், கொஞ்சம் நிதானமான ரொமாண்டிக் வகைமைகள் மட்டுமே தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டும் படைக்கப்பட்டும் வருகிறது. கவிதை தளத்திற்கான சரியான விமர்சனங்கள் மற்றும் செறிவான கட்டுரைகளில் நிலவும் போதாமை ஆகியவை காரணமாகக் கவிதை வடிவத்தில் ஆர்வம் கொள்ளும் புது வாசகனும் […]

மேலும் படி
மேல் செல்