இசையின் நுணுக்கங்களைப் புரிந்து/ உணர்ந்து/ தெரிந்து இரசிப்பவன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள முடியாது; அதன் எந்த அட்சரங்களுமே எனக்குப் பழக்கமில்லை. ஆனாலும் இசையின் இங்கிதங்களை- திறமைகளை, எங்கிருந்தாலும், எல்லோரையும்போல இரசிக்கிறவன் நான்! இசைக்கு உருகாதார் யாவர்? எவரையும் வசப்படுத்தும் ஆற்றல், இசைக்கு உண்டு என்பதை அப்படியே நம்புகிறவன். அதன் கருத்துப் புலப்படுத்தலை, மனதைக் கரைக்கின்ற அதன் ஆற்றலை மனதார அறிந்திருக்கிறவன். கடந்த 42 3/4 ஆண்டுக்கால, என் நிஜ நாடக இயக்க நாடக இயங்கு வாழ்க்கையில் […]