கலை இலக்கிய விமர்சன சிறு சஞ்சிகை
ராஜ்குமார் ஸ்தபதி -வண்ணங்களே மனிதராம்
இந்திரன் ராஜேந்திரன்

நிறமே ஒளியை வெளிப்படுத்த உதவுகிறது, இயற்பியல் நிகழ்வல்ல, ஆனால் இருக்கும் அந்த ஒற்றை ஓளி, கலைஞனின் மூளையில் உள்ளது - ஹென்றி மாத்தீஸ். தென்னிந்திய கோயில்களின் இருண்ட கூடங்களில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுவரோவியங்களை வரைந்த பழம்பெரும் ஓவியர்கள் பெரும்பாலும் பெயரடையாளமற்று இருப்பதொன்றும் ஆச்சர்யமானதல்ல. அச்சுவரோவியங்கள் ஒரு தனி நபரால் அல்லது பண்டையகால ஓவியர் குழுவால் உருவாக்கப்பட்டதா என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது கதை வேறு. இன்று நாம் அக்கலைஞனை ரத்தமும் சதையுமாக அவன் கித்தான் […]

மேலும் படி
கார்ல் குஸ்தாவ் யுங் -இன் கலைஞன்
தமிழில் சபரிநாதன்

சிருஷ்டிகரத்தின் ரகசியம், சித்தத்தின் சுதந்திரத்தைப் போல, உளவியலாளன் பதிலிறுத்தவியலாத விவரிக்கமட்டுமே சாத்தியமான ஒரு ஆழ்நிலைவாதச் சிக்கல். நாம் பலவழிகளில் தீர்க்கமுனைந்தும், வீண்முயற்சியாய் முடியும் படைப்பாளுமையும் ஒரு விடுகதையே. இருந்தபோதும் படைப்பாளி மற்றும் அவனது படைப்பு பற்றிய புதிரை ஆராய்வதிலிருந்து நவீன உளவியலாளனை இவை பின்வாங்கச் செய்துவிடவில்லை. கலைப்படைப்பிற்கான திறவுகோலை கலைஞனின் தனி வாழ்வனுபவத்திலிருந்து உய்த்துணரமுடியுமென நினைத்த ஃப்ராய்ட் அதைக் கண்டறிந்துவிட்டதாகவே கருதினார். இது ஒரு சாத்தியமான அணுகுமுறையே, ஏனெனில், கலைப்படைப்பும் நியுராஸிஸ் போலவே அகப்பான்மைகளிலிருந்து வருவித்துவிடமுடியும் என்பது […]

மேலும் படி
மேல் செல்